இன்றைய உலகத்தில் கவனச்சிதைவு ( distraction ) இல்லாமல் இருக்க யாராலும் முடியாது என்பது ஏகோபித்த கருத்து கணிப்பு. இது உண்மை தான். இதற்கும் ஒரு தீர்வு ( solution) உண்டல்லவா? அது எப்படி? சில டிப்ஸை இங்கு பார்ககலாம்:
- நான் ஒவ்வொரு நாளும் இவ்வளவு மணிநேரம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குதல் முக்கியம்.
- அவ்வளவு மணிநேரம் நீங்கள உங்கள் மனதை புரோக்ரம் (program) பண்ண பழக வேண்டும். எவ்வளவு மணிநேரம் என்பது உங்களுக்குதான் தெரியும். அதன்படி முடிவு செய்யவும்.
- இதை நான் செய்தாக வேண்டும் என்ற affirmationஐ நீங்கள் உறுதியாக மனதில் நினைவு படுத்தி அதற்கான பயிற்சியை செய்ய வேண்டும்.
- பின்பு, உங்களை அறியாமலே உங்கள் நேரத்தை கொல்கின்ற கைபேசி, தொலைகாட்சி, இண்டர்னெட், மற்றும் உங்கள் நேரத்தை வீணடிக்கின்ற அனைத்தையும் உங்கள் அறையில் அல்லது நீங்கள இருக்கும் இடத்தை விட்டு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே அப்புறப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் உங்கள் மனதை பண்பட வைக்க முடியும். ஏனென்றால் மனம் ஒரு குரங்கு.
- மனம்- நினைப்பு- உறுதிமொழி- மனோதைரியம்- சாதிப்பேன் என்ற வைராக்கியம்- அதனை அமுல்படுத்தும் முறை இவைகளை கொண்டு அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.
ஒரு காரியத்தை செய்ய, கவிஞர் பாரதியார் என்ன சொல்கின்றார் தெரியமா?
எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ண வேண்டும்,
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல்லறிவும் வேண்டும்.
வாழ்க. வளர்க. செய்து காட்டுங்கள். வெற்றி உமதே!
No comments:
Post a Comment