Wednesday, 25 January 2023

கோளப்பரப்பு குவிமாடம்

 

         கோளப்பரப்பு குவிமாடம்

                   (Geodisc Dome)

      க.சேகர் (விரிவுரையாளர்)

ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் வித்யாலய பாலிடெக்னிக் கல்லூரி

பெரியநாயக்கன்பாளையம்

கோவை 641020.

 

நமது அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு வடிவ பொருட்களை காண்கின்றோம் . அதில் நாம் தினமும் பார்க்கும் பொருட்களில் கணித வடிவங்களை ஒத்த பொருட்கள் ஏராளம் தோசை அல்லது கடிகாரம்- வட்ட வடிவத்தையும் , டிவி - செவ்வகத்தையும் , கேக் துண்டு கனசதுரத்தையும்,  கேரம் போர்டு சதுர வடிவத்தையும் ,  கால்பந்து - கோள வடிவத்தையும், முட்டை நீள்வட்டத்தையும் ,  அதே போல் பயண நேரத்தில் நாம் அதிகமாக சுவைக்கும் சமோசா தின்பண்டம் முக்கோண வடிவத்தையும் ஒத்துள்ளன . இந்த சமோசா எவ்வாறு சுவையானதோ அதே போல் இந்த முக்கோணமும் நாம் வாழ்வில் பல்வேறு பயன்களை நமக்கு தருகிறது வாருங்கள் சுவைக்கலாம்.

 

 


கோளப்பரப்பு குவிமாடம்

கோளப்பரப்பு குவிமாடம் (Geodisc dome)  என்பது கோள மேற்பரப்பு ஒன்றின் பெரு வட்டங்களின் மேல் கிடக்கும் படி ஒழுங்கமைக்கப்பட்ட ஏறத்தாளக்  கோள வடிவமான உதைக்கால்களின் வலையமைப்பு ஆகும். இவ்வலையமைப்பில் ஒன்றையொன்று  வெட்டுகின்ற பல பெரு  வட்டங்களினால் உருவாக்கப்படும் முக்கோண  அமைப்புகள் முழு கோள வடிவத்தையும் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து இணைj;து இருப்பதால் நமக்கு அதிக பலத்தை அளிக்கிறது .

 

                       


     

 

 

முக்கோணம் ;

முக்கோணம் அல்லது முக்கோணி என்பது மிகச்சிறிய எண்ணிக்கையுள்ள நேர்க்கோடுகளால் ஒரு பரப்பை அடைக்க வல்ல ஓர் அடிப்படையான வடிவம் முக்கோணம் . இவ்வடிவம் மூன்று  கோணங்களையும்  மூன்று உச்சிகளையும் நேர்கோடுகளாலான மூன்று பக்கங்களை கொண்ட ஒரு தட்டையான இருபரிமாண  உருவம் இந்த முக்கோணம் .

                                                

                     


 

கோளப்பரப்பு குவிமாடம் அமைப்பதில் முக்கோணத்தின் பங்கு:

நாம்  இந்த குவிமாடம் அமைப்பதில் சதுர வடிவத்தையோ, வட்ட  வடிவத்தையோ செவ்வகம் மற்றும்  நீள்வட்டம் போன்றவற்றை ஏன்  பயன்படுத்தாமல் முக்கோணத்தை பயன்படுத்துகிறோம் . ஏனென்றால் சதுர வடிவத்தை கொண்டு குவிமாடம் அமைப்பதால் சதுர வடிவத்தின் மேல் பகுதி அல்லது கீழ் பகுதியில் அழுத்தம் தரும் போது அவை முனைகளில் அழுத்தம்  தாங்காமல் முறிந்து விடுகிறது  அல்லது வளைந்து  விடுகிறது. மேலும் வட்டம் , செவ்வகம் , மற்றும்  நீள்வட்டம்  போன்ற வடிவங்களும் இதே தன்மையை தான் கொண்டுள்ளது . மேலும் நமக்கு வேண்டிய ஒழுங்கான  வடிவத்தை இவை அளிப்பதில்லை. இவ்வடிவத்தை கொண்டு குவிமாடம் அமைப்பதால் பலமற்று  காணப்படுகிறது. ஆனால் நாம் முக்கோண வடிவத்தை பயன்படுத்தி  குவிமாடம் அமைப்பதால்  நமக்கு அதிக பலத்தை அளிக்கிறது. ஏனென்றால் முக்கோணங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து குவிமாடம் முழுவதும் இணைக்கப்படுவதால் அவை அதிக பலம் வாய்ந்ததாக அமைகிறது . முக்கோணத்தின் ஒரு முனையை எடுத்துக் கொண்டால்  அவை ஆறு கம்பிகளுடன் இணைக்கப்பட்டுருக்கும் . இதே போல்  ஒவ்வொரு முனையும்  ஆறு கம்பிகளுடன் இணைக்கப்பட்டுருக்கும் அவை அறுங்கோண வடிவத்தை நமக்கு அளிக்கிறது

                         

 


 

மேலும் இந்தf; குவிமாடத்தின் மீது அழுத்தம் தரும் போது ஒவ்வொரு முனைகளும் அழுத்தத்தை சமமாக பகிர்ந்து கொள்கிறது . இதனால் குவிமாடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை . இதனால் இந்த முக்கோணவடிவத்தை பயன்படுத்துகின்றனர் .

19 ஆம்  நூற்றாண்டில்  அமெரிக்க , ஜெர்மன்  மற்றும் பல்வேறு நாடுகளில் இயற்கை சீற்றங்களான  நிலநடுக்கம் , எரிமலை ஆறுகள்  பெருக்கெடுத்து ஓடுதல் , சுனாமி மற்றும் சூறாவளி  காற்று இது போன்ற பல்வேறு நிகழ்வுகளால் வீடுகள் அதிகம் சேதம் அடைe;j. இதனால் மீண்டும் வீடு கட்ட  அதிக பொருட்செலவுகள் ஆனது.

இதனை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொறியாளர் பொக்மினிஸ்டர் புல்லர்(Buckminster Fuller) இந்த கோளப்பரப்பு குவிமாடத்தை உருவாக்கினார் ..



இந்த கோளப்பரப்பு குவிமாடத்தை  மக்கள் அதிகம் விரும்ப ஆரம்பித்தனர் . ஏனென்றால்

1. குவிமாடத்தை அமைப்பது மிகவும் எளிமையாக இருந்தது .

2. குவிமாடத்தை அமைக்க வேலை ஆட்கள் அதிகம் தேவை இல்லை .

3.மேலும் பொருள் செலவு மிகவும் குறைவாக இருக்கின்றது.

4.இந்த குவிமாடத்தை அமைப்பதற்கு முக்கோண வடிவத்தை பயன்படுத்துவதால் அதிக பலம் வாய்ந்ததாக அமைகிறது .

5. வீடுகளுக்கு சேதம் ஏதும் ஏற்படுவதில்லை . காற்றோட்டம் வாய்ந்ததாக அமைகிறது.

6.இயற்கை சீற்ற காலங்களில் எளிதாக வீட்டை பிரித்து மற்ற இடங்களுக்கு எளிதாக  எடுத்து சென்று வீட்டை அமைத்துக் கொள்ளலாம் .   இந்த குவிமாடத்தை அமைப்பதற்கு அதிக நேரம் தேவையில்லை, குறைவான நேரத்தில் குவிமாடத்தை அமைத்துக் கொள்ளலாம் . 

7.இப்போது மக்கள் பசுமை  இல்ல  வீடுகள் அமைக்க பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்த குவிமாட முறையை பயன்படுத்தி மிகப்பெரிய உள்விளையாட்டு அரங்குகளை  எந்தவித தூண்கள் இல்லாமல்  அமைக்க பெரிதும் பயன்படுகிறது.

8. வட்ட வடிவத்தில் குவிமாடம்  அமைப்பதால்  நமக்கு அதிக பரப்பளவு  கொண்ட வீடாகவும் அமைகிறது. இது இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய வீட்டுவசதி பற்றாக்குறைக்கு ஒரு பொருளாதார, திறமையான வழியைக் கண்டது.

No comments:

Post a Comment

UNIT 1 TONGUE TWISTERS

  TONGUE TWISTER A tongue twister is “a sequence of words or sounds, typically of an alliterative kind, that is difficult to pronounce qui...