இயற்பியல் என்பது அறிவியலின் ஒரு அடிப்படை பிரிவு ஆகும்.
இயற்பியல் என்பதன் ஆங்கிலப் பெயர் கிரேக்க மொழியிலிருந்து வந்தது.
அதற்கு இயற்கை என்பது பொருள்.
இப்பிரிவு இயற்கையினை பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவுகிறது.
இயற்பியல் இயற்கையின் பொருட்களைப் பற்றியும் அதன் ஆற்றலைப் பற்றியும் படிக்க உதவுகின்றது.
இத்துறை மிகவும் பழமையானது, மேலும் அடிப்படை அறிவியல் கோட்பாடுகளினால் உருவாக்கப்பட்டது.
பொருட்களும், ஆற்றலும் இயற்கையின் மிக முக்கியமான கூறுகள் என்பதால் இயற்பியலின் மூலம் அனைத்து வகையான கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்ள முடியும்.
இயற்பியல் துறையைப் போல் அல்லாமல் மற்ற அறிவியல் துறைகள் தனக்கென்று ஒரு எல்லைகளை வரையறுத்துள்ளன.
அதனால் சில பொருட்களைப் பற்றியும் அதன் இயக்கங்களைப் பற்றியும் மட்டுமே அத்துறைகளில் படிக்க இயலும்.
அனைத்து அறிவியல் துறைகளும் இயற்பியலின் மூலம் வளர்ந்து பின்னர் தனித்துறையாக மாறியதாக கருதப்படுவதும் உண்டு.
பொதுவாக இயற்பியலில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று பாரம்பரிய இயற்பியல் இரண்டாவது நவீன இயற்பியல்.
No comments:
Post a Comment